சூறாவளி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புளோரிடாவை நோக்கி மேலும் ஒரு பாரிய சூறாவளி நகர்வதையடுத்து, பாதுகாப்பாக மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மெக்சிகோ கடற்கரையைக் கடந்துள்ள நிலையில் சூறாவளி மேலும் வலுவடைந்து எதிர்வரும் மூன்று நாட்களில் மேற்கு பிராந்தியத்தை அடையும் என தேசிய சூறாவளி மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகவும் மோசமான புயல் இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனர்த்தத்தில் அமெரிக்க தென் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 225 பேர் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் புளோரிடாவில் மட்டும் 14பேர் பலியானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் நாட்களில் தாக்கவுள்ளதாகக் கூறப்படும் பாரிய சூறாவளியானது 67 மாவட்டங்களில் 51 மாவட்டங்களைத் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.