‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றது இலங்கை அணி

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 30-வது லீக் போட்டியில், அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி உத்தியோகபூர்வமாக ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்த வெற்றியுடன் ‘குரூப் B’ பிரிவில் இருந்து இலங்கை அணி அடுத்த சுற்றான ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் அபார வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி, சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ள நிலையில், அதன் போட்டி அட்டவணை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணி தனது முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை பெப்ரவரி 22 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.

இரண்டாவது போட்டி 25 ஆம் திகதியும் மூன்றாவது போட்டி 28 ஆம் திகதியும் இடம்பெறவுள்ள நிலையில் எதிர் அணிகள் இன்னும் தெரிவு செய்யப்படவில்லை.