சூட்சுமமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

-வவுனியா நிருபர்-

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில், பல காலமாக சூட்சுமமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை பொலிஸார் முற்றுகை இட்டுள்ளனர்

குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தலைமையிலான, பொலிஸ் குழுவினர் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்

இதன்போது, கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்தனர்

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 150,000 மில்லிலீற்றர் கோடா மற்றும் 15,000 மில்லிலீற்றர் வடி ஆகியன மீட்கப்பட்டதுடன், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன

சந்தேக நபரை இன்று சனிக்கிழமை வவுனியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்