சுவிஸ் – இத்தாலி எல்லையில் மலைப்பாம்பு மீட்பு : இருவர் கைது
சுவிஸ் – இத்தாலி எல்லை சுங்கம் மற்றும் பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகத்தின் அதிகாரிகள், காரில் மலைப்பாம்பை எடுத்துச் சென்ற இரண்டு ஆண்களை லோகார்னோ பகுதியில் வைத்து கைது செய்துள்ளளளனர்.
இத்தாலியில் வாங்கிய பாம்பை சுவிஸிக்குள் கொண்டு வருவதற்கான தேவையான அனுமதிப்பத்திரம் இவர்களிடம் இல்லாத காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லோகார்னோவில் பணியில் இருந்த கூட்டாட்சி சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலகத்தின் அதிகாரிகள் கடந்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் அதிகாலை 2:00 மணியளவில், உள்நாட்டில் சோதனை செய்தபோது, மடோனா டி பொன்டே அருகே 24 மற்றும் 30 வயதுடைய இரு இத்தாலியர்களின் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது மலைப்பாம்பை மீட்டுள்ளனர்.
மலைப்பாம்பு ஒரு மீட்டர் நீளமுள்ளதாகவும் இது இத்தாலியில் வாங்கப்பட்டது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர் ஆனால் தேவையான இறக்குமதி அனுமதிகள் இவர்களிடம் இருக்கவில்லை எனவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
வாகனத்தின் ஓட்டுநரிடம் இத்தாலிய வாகன உரிமத் தகடுகள் இருந்துள்ளதாகவும், ஆனால் இவர்கள் டிசினோவில் வசித்து வந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து வாகனத்தை சுங்க அனுமதிக்கு உட்படுத்துமாறு அதிகாரிகளினால் உத்தரவிடப்பட்டது.