சுவிற்சர்லாந்தில் காணாமல் போயுள்ள இலங்கையின் தேசிய முப்பாய்ச்சல் சம்பியன்
சுவிற்சர்லாந்தில் நடைபெற்றும் உலக உள்ளக விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்த இலங்கையின் தேசிய முப்பாய்ச்சல் சம்பியனான கிரேஷன் தனஞ்சய தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட தடகள வீரர் கிரஷன் தனஞ்சய, மும்முறை தடை தாண்டுதல் (ஆண்கள்) மற்றும் நீளம் தாண்டுதல் (ஆண்கள்) போட்டியில் தேசிய சாம்பியனான இலங்கை சாதனையாளர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரேஷன் தனஞ்சய, ஜெனீவாவில் நடைபெறும் தடகளப் போட்டியில் பங்கேற்க தனிப்பட்ட அழைப்பின் பேரில் சுவிட்சர்லாந்திற்குச் சென்றிருந்தார்.
அவருடன் பெண்கள் நீளம் தாண்டுதல் சாம்பியன் சாரங்கி டி சில்வா மற்றும் தேசிய தடகள பயிற்சியாளர் ஒய்.கே.குலரத்னா ஆகியோர் சென்றுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை தடகள செயலாளர் சமன் குமார குணவர்தன, கிரேஷன் தனஞ்சய தனிப்பட்ட அழைப்பின் பேரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால் தாம் அதற்கு பொறுப்பல்ல என தெரிவித்தார்.
நீளம் பாய்தல் போட்டியில் கலந்து கொண்ட பின்னர் தடகள வீரர் கிரேஷன் தனஞ்சய காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு, இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில் கலந்து கொண்ட பல இலங்கை விளையாட்டு வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்