சுவிட்சர்லாந்து – வலே மாநிலத்தில் மணிக்கு 144 வேகத்தில் பயணித்தவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

சுவிட்சர்லாந்து வலே மாநிலத்தின் ரரோன் (Raron) பகுதியில் மாநில பொலிசார் மேற்கொண்ட சாலையில் வேக சோதனையின் போது அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 80 கிலோமீற்றர் வேகத்திற்கு பதிலாக 144 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த கார் ஓட்டுனரின் உரிமம் அந்த இடத்திலேயே ரத்து செய்யப்பட்டது.

ரரோன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் வீதி வேக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிசார் மத்திய வலே மாநிலத்தில் வசிக்கும் 45 வயதான மொராக்கோ நாட்டு ஓட்டுநரின் உரிமம் குறித்த இடத்தில் வைத்தே ரத்துசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவத்துள்ளனர்.

இதேவேளை கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி குறித்த வீதியில் மணிக்கு 156 கிமீ வேகத்தில் பயணித்த பெல்ஜியத்தில் வசிக்கும் 44 வயதான , பெல்ஜிய வாகன ஓட்டிக்கு சுவிட்சர்லாந்தில் காலவரையின்றி வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டது.

இரண்டு ஓட்டுனர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.