சுவிட்சர்லாந்து : திருமணம் நிகழ்வில் நெடுஞ்சாலையில் 20 கிமீ குறைவான வேகத்தில் வாகன தொடரணி பொலிசார் விசாரணை
சுவிட்சர்லாந்து – ஜேர்மன் எல்லைப் பகுதியான தெற்கு பேடனின் பின்சென் நகரில், பெரும்பாலும் சுவிஸ் உரிமத் தகடுகளுடன் கூடிய ஒரு டஜனுக்கும் மேற்பட்ட “உயர் செயல்திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார்கள்” திருமண நிகழ்வின் போது அதிவேக நெடுஞ்சாலையில் மணிக்கு 20 கிலோமீற்றருக்கும் குறைவான வேகத்தில் பயணித்ததாக ஜேர்மன் ஃப்ரீபர்க் பொலிஸ் தலைமையகம் திங்களன்று அறிவித்தள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது லோராச் நோக்கிச் செல்லும் ஏ98 கூட்டாட்சி அதிவேக நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியளவில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட வாகனத் தொடரணி நெடுஞ்சாலை போக்குவரத்தைத் பெரிதும் பாதித்துள்ளது.
வாகன தொடரணி திருமணக் குழுவினர் நெடுஞ்சாலையில் ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். அவர்கள் லோராச் அருகே அதிவேக நெடுஞ்சாலையை விட்டு வெளியேறும் போது ஆம் ரைன் போக்குவரத்து பொலிசார் சில தனிப்பட்ட வாகனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
நெடுஞ்சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறி மெதுவாக வாகனத்தை செலுத்தி ஏனைய வாகன ஓட்டிகளுக்கு இடையூறுகளை விளைவித்த ஏனைய வாகனங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.