சுவிட்சர்லாந்து ஏலத்தில் அரிய நீல வைரம் 21.5 மில்லியன் ஏலம் போனது
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் மிகவும் அரிதான நீல வைரம் 21.5 மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாக சோத்பிஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது 10.3 காரட் எடையுள்ள, 20 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிடப்பட்ட ஆடம்பரமான மிகவும் கவர்ச்சியான நீல நிற வைரமான தி மெடிட்டரேனியன் ப்ளூ, தீவிரமான ஏலப் போரில் கடையாக 21.5 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது.
ஒன்பது மில்லியன் சுவிஸ் பிராங்குகளில் (10.8 மில்லியன் டொலர்) ஏலம் தொடங்கியது, கடுமையான ஏலத்தின் பின்னர் வைரம் இறுதியில் ஒரு தனியார் அமெரிக்க சேகரிப்பாளருக்கு 17.9 மில்லியன் பிராங்குகளுக்கு (21.5 மில்லியன்) விற்கப்பட்டது என்று சோத்பிஸ் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற கல்லினன் சுரங்கங்களில் எடுக்கப்பட்டதில் இருந்து சமீபத்தில் இந்த புதிய நீல வைரமான மெடிட்டரேனியன் புளு என பெயரிடப்பட்டு , மார்ச் மாதம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டதிலிருந்து வைரத் தொழிலுக்குள் பெரும் உற்சாகத்தை உருவாக்கியதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அதன் இறுதிக் காட்சிக்கு முன்னதாக, கடந்த மாதம் அபுதாபியில் நடந்த சோத்பியின் முதல் கண்காட்சியின் ஒரு பகுதியாக இது வெளியிடப்பட்டது, அங்கு இது 100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஏழு “அசாதாரண” வைரங்கள் மற்றும் இரத்தினக் கற்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது.
“அபூர்வ பிரமிட்டின் உச்சியில் நீல வைரங்கள் உள்ளன,” என்று வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள சோத்பியின் நகைகளின் தலைவரான குயிக் ப்ரூனிங் அபுதாபி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.