சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்குண்டு இரு சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தின் டாஷ் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்னர்.
சனிக்கிழமை அதிகாலையில், இரண்டு மலையேற்ற வீரர்கள் அல்புபெல் மலையில் ஏறும் நோக்கத்துடன் டாஷ் ஹட்டில் இருந்து புறப்பட்டனர். சுமார் 4,165 மீட்டர் உயரத்தில், பனி மூக்கு என்று அழைக்கப்படும் பகுதியில், ஒரு பனிச்சரிவில் சிக்குண்டு இருவரையும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து வாலிஸ் ஏர் ஜெர்மாட் மீட்பு அமைப்பின் அவசர சேவைகள் அழைக்கப்பட்டு மோப்ப நாய்களின் உதவியோடு தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதும் மலையேறும் வீரர்களின் மரணத்தை மட்டுமே உறுதிப்படுத்த முடிந்தது.
இறந்தவரை முறையாக அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பில் அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.