சுவிட்சர்லாந்தில் படுக்கை அறையில் மீட்கப்பட்ட 90செ.மீ. நீளமுடைய பாம்பு

சுவிட்சர்லாந்தின் சப்ஹவுசென் (Schleitheim) பகுதியில் உள்ள வீடொன்றில் படுக்கை அறையில் இருந்து 90 செ.மீ. நீளம் உடைய பாம்பை பொலிசார் மீட்பு பாதுகாப்பாக, வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

திங்கட்கிழமை இரவு 10:22 மணியளவில் தங்களுடைய வீட்டில் பாம்பு ஒன்று உள்நுழைந்துள்ளதாக 75 வயதான சுவிஸ் நபர் சப்ஹவுசென் பொலிஸ் நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்குத் தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரிகள் வரும் வரை பாம்பு மறைந்திருக்கும் இடத்தை கண்காணிப்பின் கீழ் வைத்திருக்குமாறு கட்டுப்பாட்டு மையத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்ட நிலையில் குறித்த தம்பதியினர் பாம்பின் மறைவிடம் தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வந்தனர்.

குறித்த இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் சுமார் 90 செ.மீ. நீளம் கொண்ட விஷமற்ற புல்வெளியில் காணப்படும் பாம்பு என அடையாளம் கண்டுள்ளனர். குறித்த பாம்பை பாதுகாப்பாக மீட்ட பொலிசார் சாக்கில் பிடித்துக்கொண்டு அருகிலுள்ள வனப்பகுதியில் விடுவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க