சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை
சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் உள்ள பர்ஹோஃபென்(Oberhofen) துனெர்சியில் (Thunersee ) உள்ள ஒரு வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை அதிகாலை துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆயுதமேந்திய ஒருவர் வர்த்தக நிலையத்தில் இருந்த ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி, பணத்தை கௌ;ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தொகை தொடர்பான சரியான மதிப்பீடுகள் தெரியவரவில்லை.
ஓபர்ஹோஃபென் , துனெர்சியில் உள்ள பிரதான சாலையில் உள்ள ஒரு கடையில் அதிகாலை 5:15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்ளைச் சம்பவத்தையடுத்து , உடனடி தேடுதல் நடவடிக்கைகள் இருந்தபோதிலும், குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. குறித்த குற்றவாளி 170 முதல் 180 சென்டிமீட்டர் உயரமுள்ள ஒரு இளைஞன் என்றும் , அவர் சரலமாக சுவிஸ் ஜெர்மன் மொழி பேசியுள்ளார் எனவும் ஆரம்பகட்ட விசாரணைள் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மாநில பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.