சுவிட்சர்லாந்தில் இலங்கையரின் சடலம் மீட்பு : சந்தேகத்தின் பெயரின் இரு சுவிஸ் நாட்டவர் கைது
சுவிட்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து நேற்று புதன்கிழமை இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரின் இரு சுவிஸ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓபிக்கோன் நகராட்சிக்கு உட்பட்ட கிளாட்ப்ரூக் உள்ள ரைட்தோஃப்ஸ் வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவசரகால சேவைகளால் உடனடியாக முதலூதவி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இலங்கையைச் சேர்ந்த 34 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற குடியிருப்பில் இருந்த 40 மற்றும் 54 வயதுடைய இரண்டு சுவிஸ் ஆண்களை சூரிச் மாநில பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இலங்கையரின் உயிரிழப்பிற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் தொடர்பில் சூரிச் மாநில பொலிசார் மற்றும் ஜூரிச் மாநில அரசு வழக்கறிஞர் அலுவலகம் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களைப் சோதனைக்கு உட்படுத்தி வருவதோடு , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த இலங்கையர் தொடர்பில் எவ்வித மேலதிக தகவல்கள் எவற்றையும் பொலிசார் வெளியிடவில்லை.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்