சுவிட்சர்லாந்தில் இன்று இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள்
சுவிட்சர்லாந்தில் மாநிலங்கள் தோறும் இன்று புதன்கிழமை இடம்பெறும் முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.
சுக்- லின்டன்சம் ஏ4 அதிவேக நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் எவ்வித உயிர்சேதங்களும் ஏற்பாடவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு இலட்சம் சுவிஸ் பிரங்குகள் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
சோலத்தூன்- டுலிக்கன் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று நண்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற தீவிபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டின் சமையலறையில் ஏற்பட்ட தீ பரவல்தான் விபத்திற்கான காரணம் என பொலிசார் தெரிவித்துள்னர்.
பெர்ன்- சுலூஸ் வீதியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 61 வயதான ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதியால் நடந்து சென்றிருந்தவர் மீது கார் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெர்ன் –இன்ஸ் பகுதியில் காரும் லொரியும் இன்று காலை 7 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கார் ஓட்டுநர் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
லொரி சாரதி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் பெலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சூரிச்- டீடிகோன் முட்செல்லென்ஸ்ட் வீதியில் 121 கிலோமீற்றர் வேகத்தில் காரை செலுத்திய 37 வயதுடைய கங்கேரி நாட்டவர் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் , இவருடைய சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
60 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டிய வீதியில் இவர் 121 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.