சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தினுடைய புதிய மாணவர் ஒன்றியத்திற்கான நிர்வாகத் தெரிவு!

 

-மட்டக்களப்பு நிருபர்-

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்  மாணவர் ஒன்றியத்திற்கான புதிய நிர்வாக தெரிவு அண்மையில்  இடம்பெற்றது.

இதன்போது, தலைவராக ரி.குமாரேஸ்வரனும்,  உப தலைவராக ஆர்.கோபாலனும், செயலாளராக எஸ்.சசிகுமாரும்,  பொருளாளராக எம்.ருசாந்தனும், பதிவாளராக கே.டிலக்ஷனும் தெரிவாகினர்.

பதவிகளுக்காக 10 பேர் தேர்தலில் போட்டியிட்டனர், அவர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் அப் பதவிகளுக்காக மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டதுடன், 08 பேர் கொண்ட நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.

அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நிருவாகப் பணிப்பாளர் திருமதி புளோரன்ஸ் பாரதி கென்னடியினால் வழங்கி வைக்கப்பட்டது.