சுற்றுலா விடுதியில் தீப்பரவல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியா – கோவா பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விடுதியின் சமையலறையில் உள்ள எரிவாயு சிலிண்டர் வெடித்ததன் காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என அந்நாட்டுக் காவல்துறையினர் முன்னதாக சந்தேகித்திருந்தனர்.

மேலும், விடுதியிலுள்ள உட்புற வானவேடிக்கைகள் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட மொத்தமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது குறித்த விடுதியின் மேலாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.