சுற்றுலா விசாவில் வந்து இலங்கையில் வியாபாரம் செய்த ரஷ்ய பெண் கைது!

சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொண்ட ரஷ்ய நாட்டு பெண் ஒருவர் உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதான அந்தப் பெண் தனது சுற்றுலா விசாவை மீறி உனவட்டுன பகுதியில் இரவி விடுதி போன்று உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலையை நடத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ரஷ்ய பெண் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு நாளை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.