
சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை
2025 பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 240,217 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது இதுவரை பெப்ரவரி மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 235,618 சுற்றுலாப் பயணிகள் அதிக வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.