
சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் விபத்து : 6 பேர் உயிரிழப்பு!
செங்கடலில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பலில் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹுர்காடா கடற்கரையில் உள்ள பவளப்பாறைகளை ஆராய்வதற்காக இவர்கள் சென்றுள்ளனர்.
இந்த விபத்தில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பயணிகளில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
