
சுற்றுலா சென்று வீடு திரும்பிய குடும்பம்: தாயும் மகளும் பலி
காலி கரந்தெனிய பிரதேசத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது 42 வயதுடைய தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 38 வயதுடைய தாயும், 13 வயதுடைய மகளும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர்.
விடுமுறை நாட்களில் மலையகத்துக்குச் சுற்றுலா சென்றுவிட்டு கரந்தெனிய பிரதேசத்திலுள்ள வீட்டுக்கு காரில் வந்துகொண்டிருந்த குடும்பமே வீட்டுக்கு 500 மீற்றர் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கனரக வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
