சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 50% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 60,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என்றும், ஆனால் மார்ச் மாதம் கிட்டத்தட்ட 110,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிற்கு தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகையும் 1000 – 1500க்கு இடையில் குறைந்துள்ளதுடன், மார்ச் மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 4000 – 5000 வரை காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு போன்றவை சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.