சுற்றுலாப் பயணிகளின் சுதந்திரத்தை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்கள் சுதந்திரமாக பயணிப்பதற்கு தேவையான சூழலை தயார்படுத்துமாறு, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்புப் படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் முச்சக்கரவண்டி சாரதிகளின் பல்வேறு கெடுபிடிகளினால் பாதிக்கப்படுவதாகவும், அவர்களது சொத்துக்களை சிலர் அபகரித்து வருவதாக கடந்த வாரம், பாரிய மற்றும் சிறு சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து முறையிட்டிருந்தனர்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென்றாலும் அவதானமாக இருப்பதே பொருத்தமானது என சாகல ரத்நாயக்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்