சுற்றுலாத் துறை முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கான பயிற்சி செயலமர்வு
-கிண்ணியா நிருபர்-
“கிளீன் ஸ்ரீலங்கா ” Clean Sri Lanka “தேசிய வேலை திட்டத்தின் கீழ் சுற்றுலாத் துறையில் பணிபுரியும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் நெறிமுறைகள் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக மனப்பான்மை மேம்பாட்டுப் பயிற்சி கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் இடம் பெற்றது.
சுற்றுலாப் பயணிகளுக்கு நட்பு மற்றும் பாதுகாப்பான சேவையை வழங்கும் நோக்கில், 2025 ஆம் ஆண்டில் முழு நாட்டையும் உள்ளடக்கிய மாகாண மட்டத்தில் தொடர்ச்சியான பயிற்சித் திட்டங்களை கிளீன் சிறிலங்கா செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.
கிழக்கு மாகாண பயிற்சித் திட்டத் தொடரின் தொடக்க நிகழ்ச்சி கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவின் தலைமையில் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி பிரிவின் கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
சுற்றுலாத் துறையில் பணிபுரியும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் தொழில்முறை தரம் மற்றும் நெறிமுறைகளை மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளுக்கு நட்பு, நம்பகமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து சேவைகளை வழங்குவதை உறுதி செய்தல், மோசமான தரமற்ற சேவைகள் காரணமாக இலங்கையில் சுற்றுலாத் துறையில் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் குறைத்தல் மற்றும் கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் சமூகத்திலும் சுற்றுலா சேவை வழங்கலிலும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குதல் ஆகியவை இதன் நோக்கமாகும்.
அதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பப் பயிற்சி தொடங்கியது, கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா தலங்களைக் கொண்ட இடங்களில் முச்சக்கர வண்டி வேலைகளில் பணிபுரியும் ஆண்களுக்காக இதுபோன்ற 11 பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் நாமல் தலங்கம, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் முகமது பைசல், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் பிரியந்த மாலவென்ன, கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் கித்சிறி நவரட்ண மற்றும் பிற அதிகாரிகள், திருகோணமலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர், பாதுகாப்புப் படையினர் மற்றும் திருகோணமலை முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.த் தமிழ்ச்சங்கத்தினர் தெரிவித்தனர்.
