
சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலா வருமானம் 242.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் இந்த வருடத்தின் வருமானம் 478.7 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
