சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல்கள்- ஓர்பதிவு

கலாநிதி.எம்.பி.ரவிச்சந்திரா (SLTES)-சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல்கள்- ஓர்பதிவு

மகுடம் பதிப்பகத்தின் எண்பதாவது வெளியீடாக வெளிவந்திருக்கும் “சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல்கள்” 1962 தொடக்கம் 1968 வரை இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில் மேடை ஏற்றப்பட்ட கர்ணன் போர் (1962 ), நொண்டி நாடகம் (1964), இராவணேசன் (1965 ),வாலி வதை (1966), சங்காரம்( 1969 )என்னும் ஐந்து எழுத்துருக்களின் தொகுப்பாகும். இது ஈழத் தமிழர் தம் கலை தேடலின் முன்னோடி பேராசிரியர் சு. வித்தியாந்தனுக்கு சமர்ப்பணம் ஆக்கப்பட்டுள்ளது .

முன் அட்டை தமிழர்களின் சுயத்தை, அடையாளத்தை வெளிப்படுத்தும் நிறங்களின் மூலம் அடையாளப்படுத்த இராவணேசன் போர்க்களக் காட்சி அட்டையை அலங்கரிக்கின்றது. இது தேசிய எழுச்சியில் இராவணேசன் நாடகத்தின் உருவாக்கம் , வளர்ச்சி நிலைகள் , பரிசோதனை முயற்சிகள், தமிழர் தம் தொன்மையின் , மரபுரிமைகளின், பண்பாட்டின், அடையாளங்களை நுகர்தல் தொடர்பான கரிசனையை ஏதோ ஒரு வகையில் புலக்காட்டி நிற்கின்றது எனலாம்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற கோட்பாட்டினை வலியுறுத்தும் பதிப்புரை உலக இலக்கியங்கள் அனைத்தும் மாற்றத்திற்குள் உள்ளாகி வருகின்ற காலத்தில் கூத்து வடிவமும் மாற்றத்தை வேண்டி நிற்கின்றது. அந்த மாற்றத்தின் நியதியில் பயணித்தவர்களில் சி.மௌனகுரு முதன்மையானவர். ஆடல் முறையில் மாற்றத்தையும் ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர் என பதிப்பாசிரியர் மைக்கேல் கோலின் தமது பதிப்புரையில் அழுத்திச் சொல்வது குறிப்பிடத்தக்கது. இந்நூலுக்கு தகை சால் வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் அணிந்துரை வழங்கியுள்ளார். பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களும், பேராசிரியர் மௌனகுரு அவர்களும் பேராதனை பல்கலைக்கழக கற்கை காலத்துக்கு முன்னர் இருந்து இன்று வரை உயர்கல்வி மொழி துறையிலும் கலைத்துறையிலும் ஒருமித்து பயணித்தவர்கள். இருவரும் அகவை 80ஐ கடந்தவர்கள். இரு வரும் இரு பெரும் முதுசங்கள் கலைத்துறையில் குறிப்பாக ஈழத்து நாடகத்துறையில் மௌனகுரு ஒரு வரலாற்று பொக்கிசம்.

கடந்த நூற்றாண்டுக்கு முன் உள்ள குறிப்பாக 19ஆம் நூற்றாண்டு ,இருபதாம் நூற்றாண்டு, 21 ஆம் நூற்றாண்டின் கால் நூற்றாண்டையும் கடந்து நிற்கும் வரலாற்று பொக்கிசம் 19 ஆம் நூற்றாண்டின் விடயங்களை தம் தந்தை, தாய் வழியில் நேரடியாகவும் உறவினர் ,சமூகத்தவர் மூலமும் வரலாறுகளை, சம்பவங்களை கேட்டும், அறிந்தும, பார்த்தும் பயணித்த அனுபவங்கள் நிரம்பியவர்.மேலும் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பிறந்தவர.;

1950 க்கு முற்பட்ட வரலாறுகளையும் 1950 க்கு பிற்பட்ட இன்று வரை உள்ள வரலாறுகளையும், பண்பாடுகளையும் கலைத்துறை ,கல்வித்துறை ,அரசியல் துறை என சமூக மாற்றங்களை கண்டும் அனுபவித்தும் அதனோடு கலந்தும் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர. இந்த ஆதார சுருதி இன்றைய கால தேடல் அனுபவங்களை ஆய்வு செய்வதற்கு மிக முக்கியமானதொரு ஆய்வு பொக்கிசம் மட்டுமல்லாமல் அவர் ஒரு புலமையாளர.  இயல், இசை, நாடகம் என்னும் மூன்றையும் கற்று உணர்ந்தவர. கல்வி அறிவில் மேம்பட்டவர்களை புலவர் என்போம். குணவீர பண்டிதர் தமது வெண்பா பாட்டியல் நூலில் குறிப்பிடுவது போல் கவி, கமகன் ,வாதி ,வாக்கி என குறிப்பிடப்படும் புலவர்களில் புதிது புனைபவu; கவி எனவும், கற்காத விடயத்தை விசேட நுண்மதியால் மெய்ப்பொருள் உணர்ந்து கூறவல்ல புலவரை கமகன் என்றும் ,எடுத்துக்கொண்ட பொருளை வாதம் செய்து சாதிக்க வல்லோரை வாதி ,என்றும் கேட்போர் எல்லோரையும் கவரும் வகையில் சுவைகுண்றா வகையில் சொசெற்நெறிவும் பொருள் விரித்தும் பேசவல்ல புலமையாளரை வாக்கி எனவும் குறிப்பிடுகிறார். பேராசிரியர் மௌனகுரு இந்த நாள் வகை பாத்திரங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குபவர்.

இந்தப் பின் புலத்தில் நின்று சுருக்கமும் ஆக்கமும் நூலை ஆய்தல் பொருத்தம் என கருதலாம். 1962 இல் எழுதப்பட்டு மேடையேற்றப்பட்ட கர்ணன் போர் 1963 இல் எழுதப்பட்டு 1964 இல் மேடை யேற்றப்பட்ட நொண்டி நாடகம் இவை இரண்டு கூத்துகளும் மட்டக்களப்பிலே விடிய விடிய ஆடப் பெற்ற கூத்துப் பிரதிகளை அடிப்படையாகக் கொண்டு சுருக்கி எழுதப்பட்டது. இங்கு கர்ணன் போர் வடமோடி பிரதி, நொண்டி நாடகம் தென்மோடி பிரதி ஆகும். இரு பிரதிகளும் பேராசிரியர் வித்தியானந்தன் தலைமையில் நாடகமாக மேடையேற்றப்பட்டது. மூன்றாம் ,நான்காம் கூத்து பிரதிகள் இராவணேசனும், வாலி வதையும் ஆகும். 1965, 1966இல் எழுதப்பட்டு மேடையேற்றப்படுகின்றது. இவை இரண்டும் மௌனகுருவால் எழுதப்பெற்ற கூத்து பிரதிகள் ஆகும். இது இவரது பல்கலைக்கழக கற்றல் காலம். ஐந்தாவது பிரதி 1969இல் மௌனகுருவால் எழுதப் பெற்ற சங்காரமாகும்.;

இங்கு ஒரு மாற்றம் இடம்பெறுகின்றது. கர்ணன் போரும், நொண்டி நாடகமும் கூத்தை சுருக்கிய கூத்துகளாக வெளி காட்ட ராவணேசனுன் வாலிவதையும் இவை புதிதாக எழுதப்படுகிறது. கர்ணன் போர், நொண்டி நாடகம் மட்டக்களப்பு மரபுவழி கூத்துக்களை அச்சரம் பிசகாமல் நேரத்தைச் சுருக்கி அளிக்கை செய்யப்படுகிறது. ஆனால் இராவணேசன், வாலி வதை புதிதாக புணையப்படுகிறது. கிராம மக்களுக்கு உரிய கூத்துக்களை நகர மக்களையும் கவரும் வகையில் அளிக்கை செய்கின்ற முறைமை ,பாத்திர வார்ப்பு இவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகிறது. காரணம் பாடல்கள், வசனங்கள், விளக்கமின்மை, நாடகப் பண்புகள், உணர்ச்சி npவளிபாடுகளின் போதாமை, அன்றைய தேசியஉணர்வும் கலை தேடலும், தமிழ்த் தேசியத்தின் தன்னடையாளக் கலைகளை அடையாளப்படுத்த வேண்டிய தேவை இதன் காரணமாகவே பேராசிரியர் வித்தியானந்தன் கேட்டதற்கு இனங்க இளம் வயதில் இருந்தே மட்டக்களப்பு கூத்தினை அனுபவித்து வாழ்ந்து வரும் மௌனகுரு அவர்களுக்கு நொண்டி நாடக தயாரிப்பு அனுபவங்களும் கர்ணன் போர் அனுபவங்களும் இராவணேசன் தயாரிப்பதற்கு பெரிதும் உதவின. இராம நாடகப் பிரதி, கம்பராமாயணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இராவணேசன் கூத்து பிரதி உருவாக்கப்பட்டது. இங்கு இராவணேசனில் ராவணன் என்னும் பாத்திரம் முக்கிய படுத்தப்பட்டது. தும்பியல் நாயகனாக இராவணன் சித்திரிக்கப்பட்டான.; இந்த பாத்திர உருவாக்கத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்த பிரதி உருவாக்கும் போது கைலாசபதி, சிவத்தம்பி ,வித்தியானந்தன் போன்றோரின் வழிபடுத்தல்கள் இருந்தன என்பதை மௌனகுரு அவர்கள் இதய சுத்தியுடன் தெரிவிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இராவணேசன் நாடகப் பிரதியின்; ஏழாவது காட்சி அமைப்பில் நாடகப் பிரதிக்குரிய குறிப்புகள், அமைப்பு முறைகள் புகுத்தப்பட்டன. ஒளி அமைப்பு காலகட்டத்துக்குரிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. ஆனால் வாலிவதை 1965 இல் பல்கலைக்கழ கத்தை விட்டு மௌனகுரு வெளியேறிய பின் வித்தியானந்தன் கேட்டுக் கொண்டதற்கு இனங்க பல நாடக அம்சங்களை உள்வாங்குகின்றது. வாலி வதை வரை ஆட்டத்துடன் அமைந்த பிரதி வாலி விழுந்த பின் அசைவுகள் ஊடாக நடைபெறுகிறது. இங்கே ஒரு படிம வளர்ச்சியை அவதானிக்கலாம். இராவணேசனில் ராம நாடகத்தின் சில பாடல்களையும் கம்பனின் இராமாயணத்தில் சில பாடல்களையும் உள்வாங்கி இராவணேசன் நாடகம் எழுதப்பட வாலி வதை படலத்தை அவ்வாறே முழுமையாக உள்வாங்கி ஒரு கூத்து பிரதியாக மாற்றப்படுகிறது.

எளிமையான சொற்கள், தெளிவுக்குரிய ராகங்கள் ,எளிய நடை இவ்வாறு பிரதிகள் அமைய 1969இல் சங்காரம் இன்னொரு கட்டம் நோக்கி வளர்கின்றது. இங்கு முன்னர் கூறிய நான்கு பிரதிகளும் புராண இதிகாச கர்ண பரம்பரை கதைகளை அடிப்படையாகக் கொண்டு அமைய இங்கு சங்காரம் சமகால அரசியல் சமூக பிரச்சினைகளை பேசு பொருளாகிக்கொண்டது. சமூக சிக்கல்களை பேசும் பொருளாக பாரம்பரிய கலை மாற்றம் காண்கின்றது.

இது கற்றதன் அனுபவம், பழமை, பழமையும் புதுமையும் ,பழமை தழுவிய புதுமை அது சமகால தேவை ,பூர்த்தி இந்த வளர்ச்சி நிலையை சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல்கள் நூல் வெளிக்காட்டி நிற்கின்றது. இது மௌனகுரு சார்ந்த வளர்ச்சி மட்டும் அல்ல ஈழத் தமிழ் நாடகத் துறை சார்ந்த ஒரு வளர்ச்சியும் கூட.

இருப்பதைக் கற்றல், உள்ளபடி அளித்தல், புதியதை புகுத்துதல், சோதித்தல் ,பழமையையும் புதுமையும் கலத்தல், பழமையில் புதுமையை புகுத்துதல் இது மாற்றங்களின் அடையாளம். இது உலக நியதி, சமூக நியதி ,மாற்றம் என்ற சொல்லைத் தவிர உலகில் அனைத்தும் மாறும். அது எந்த துறையையும் விட்டு வைக்காது. ஏனெனில் பண்பாடு காலத்துக்கு காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு பண்பாட்டை புரட்சிகள் ,போர்கள் , கண்டுபிடிப்புகள், இயற்கை அனர்த்தங்கள் தொழில்மயமாதல், நவீனமயமாதல் என்ற பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நாம் மாறும் பண்பாட்டில் வாழ்கின்றோம். மாறும் பண்பாட்டில் இருந்து இது மாறாதது என்று கூறுவது மடமைத்தனம.;

ஏனெனில் பண்பாடு உகந்த பண்பாடு, உண்மை பண்பாடு என நோக்கப்படுகிறது. உண்மை பண்பாட்டில் நாம் வாழ்கின்றோம். நாகரீக உடை அணிகின்றோம் .உணவுகளை உண்போம். ஆனால் உகந்த பண்பாடு என்பது எமது வேட்டி சால்வை, எமது பாரம்பரிய உணவு முறை எனவே அனைத்திலும் மாற்றத்தை அனுசரித்து அனுபவிக்க நாம் கூத்தில் மாற்றம் ஏற்படுத்தக் கூடாது என்பது அதனை இரசனைக்குரியதாக மாற்றக் கூடாது என அடம் பிடிக்கின்றோம். நாம் எதை செய்தாலும் உலக ஓட்டம் என்பதை அனுசரிக்காவிட்டால் நாம் அங்கிருந்து இலகுவாகவே புறந்த ள்ளப்படுவோம.; அதுவே எமது கலைக்கும் பண்பாட்டுக்கும் நாம் வைக்கும் ஆப்பாக அமையும்.

இந்த வகையில் இந்த ஐந்து நாடகப் பிரதிகளின் கட்டமைப்பை பார்க்கின்ற போது மௌனகுருவின் கூத்து புலமையும் இயல,; இசை ,நாடக புலமையும் துல்லியமாக புலப்படும். நாடக கீயத்தின் தன்மை பற்றி சிந்திக்கின்ற போது நாடகாந்தம் கவித்துவமான சொற்கட்டமைப்பு தெளிவு ஏற்படும். மோதலின் வெடிப்பில் ஒரு புலவரின் கவித்துவம் மேற்கிளம்பும.; இது உரையாடல்களில் தெளிவுறும். இந்தப் பின் புலத்தில் கூத்துப் பாடல்களுக்கு ஓசைநயம் முக்கியமானது. இங்கு யாப்பு முக்கியமானது. அசைகளினால் ஆன சீர் ,சீர்களால் ஆன அடி, ஆன எதுகை, மோனை, இயைபு ,தொடை இந்த யாப்பிலக்கண அழகியலை மௌனகுரு கையாண்டுள்ள முறமை அற்புதமானது. இங்கே தான் அவர் தன்னை ஒரு புலமையாளராக ,வாக்கியாக வரித்துக் கொள்கிறார.; இந்த புலமை இல்லாமல் கூத்த எழுத முடியாது. எழுத்துருவை தயாரிக்க முடியாது. ஒரு படைப்பிலக்கியம் என்பது மகிழ்ச்சி, சோகம் ,பரவசம் சிரிங்கார ரசம் ,பரபரப்பு என்ற பல்வேறு உணர்வுகளால் சூழப்பட்டது.

கூத்தில் அகவல், வெண்பா ,கலிவெண்பா, கலித்துறை, கட்டளை கலிப்பா ,ஆசிரிய விருத்தம் கலிவிருத்தம் ,கொட்சகம் போன்ற பாவினங்கள் சிந்து ,தோடையம், தரு ,இன்னிசை, பரணி, தாழிசை உலா, கீர்த்தனம், தேவாரம் ,வண்ணம் ,திருவாசகம் போன்ற பாவகைகள் கையாளப்படுவது வழமை. இவை இந்த ஐந்து பிரதிகளிலும் நிரம்பவே உண்டு. விருத்தமானது மிக முக்கியமானது. இங்கு அழைத்தல் .கேட்டல். நிலை உரைத்தல் ,கொழு வருதல், அறிமுகம் ,ஏவுதல் போன்ற சந்தர்ப்பங்களில் விருத்தம் முக்கியம் பெறுகின்றது.

மேலும் தருக்களின் பயன்பாடு சிறப்பாக அமைய பெற்றுள்ளது. ஏனெனில் கதை நகர்வதற்கு தருக்களின் பங்களிப்பு கூத்திலே இன்றை அமையாது. மறுதரு, வரவுத்தரு; ,பல்லவி தரு, விளையாட்டு தரு ,தோற்றத்தரு, வண்ணத்தரு, தர்க்கத்தரு, சபைத்தரு, ஏணித்தரு, சண்டை தரு ,தாளிசை தரு, கொச்சகத்தரு ,தாலாட்டு தரு ,ஊஞ்சல் தரு ,வழிநடைத்தரு, கலிப்பா தரு, தேவாரத் தரு, வாழ்த்துதல்தரு என தருக்களின் பயன்பாடு விரவிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் பீட்டர் புரூக்கின் நாடகக் கோட்பாடு அன்றைய கால சூழலில் இப்பிரதிகளில் பிரதிபலிப்பதை காண முடிகின்றது. மொழி ,ஒளி, அசைவு ,வெளி என்ற நாடக மூலங்கள் அதன் அழகியலை வெளிக்காட்டி நிற்கின்றன.

இந்த வகையில் கூத்து அவர் உடலிடம் கொண்டது பாக்கியமா! அபாக்கியமா! என்று கேட்டால் நிச்சயம் அது பேராசிரியர் .சி .மௌனகுருவிடம் ஒட்டிக்கொண்டது பாக்கியமே. ஏனெனில் கூத்து அவரை வளர்த்துள்ளது. அவரால் அதுவும் வளர்ந்துள்ளது. இது படைப்பு இயல்பின் இடையராத தொடர்பாக அமைகிறது. இந்த வகையில் ஈழத்து கூத்துகளில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை காலத்துக்கு காலம் மௌனகுரு மேற்கொண்டு இருக்கிறார.; அதற்கு வித்தியானந்தன் வழிபடுத்தி அவர் எழுதிய இராவணேசன் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.

இராவணேசன் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு புதிய முயற்சிகளோடு மேடை ஏற்றப்படுகிறது. குறிப்பாக அரங்கவிதானிப்பு ,காண்பியங்கள் ,நடிப்பு முறைகள், ஒப்பனைகள,; இசை ,ஒளி ,ஒலி நுட்ப முறைகள் அனைத்திலும் ஒவ்வொரு முறையும் பரிசோதனை முயற்சிகள் இடம் பெறுகின்றன. இராவணேசனின் ஒவ்வொரு அவதாரமும் ஈழத்து நாடக பரிசோதனை முயற்சிகளில் ஒருவரது தொடர்ச்சியான பரிசோதனை முயற்சிகளின் வெளிப்பாடாகவும் ஆய்வு முயற்சியாகவும் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. இந்த உள்ளார்ந்த சிந்தனாவாதத்தை புரிந்து கொள்ளாதவர்க்கு இராவணேசன் வெறும் நாடகமாக தான் தெரியும.; ஏனெனில் அவர்கள் அறிவையும் கண்களையும் விழிப்புணர்வு அற்ற இரும்புத்திரை மறைத்திருக்கின்றது. ஆழ்ந்து சிந்தித்தால் ராவணேசனின் கலைப் பண்பாட்டு உளவியல் புரியும். ஏனெனில் மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றங்கள் இன்றிய சமுதாயங்கள் உலகில் தன்னிறைவு கண்டது கிடையாது.

கலைப்பண்பாட்டு நுகர்ச்சியில் பேராசிரியர் மௌனகுரு இதனைச் சாதித்திருக்கிறார. சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல்கள்- ஓர்பதிவு

அதனை இந்த நூல் செய்திருக்கின்றது.