
சுரங்கம் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி
பலாங்கொடை, பின்னவல பொலிஸ் எல்லைக்குட்பட்ட பல்லேவெல வளவ ஆற்றுப் பகுதியில் சுரங்கத்தின் கீழ் புதைக்கப்பட்ட ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பலாங்கொடை, பல்லேவெல ஆற்றுப் பகுதியைச் சேர்ந்த நதிக சாரத குணதிலக்க என்ற 26 வயது இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் வேறொரு குழுவுடன் மாணிக்கக்கல் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, சுரங்கத்தில் மண் குவியல் சரிந்து விழுந்ததில் மண் குவியலின் கீழ் அவர் புதைக்கப்பட்டார்.
பிரதேச மக்கள் மற்றும் பின்னவல பொலிஸாரின் இரண்டு மணி நேர முயற்சிக்குப் பின்னர் அவரை வெளியே எடுத்து பலாங்கொடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மண் குவியலுக்கு அடியில் புதைக்கப்பட்ட மற்றொரு நபர் லேசான காயங்களுடன் பலாங்கொடை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
