சுமார் 20 வருடங்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி வைத்தியர்!

சுமார் 20 வருடங்களாக மருத்துவராக வேடமிட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த ஒருவர் எகொட உயன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்துவ, வாதுவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேகநபரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மருத்துவர் அல்ல என்றும், இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்யப்பட்ட மற்றொரு மருத்துவரின் பதிவு எண்ணைப் பயன்படுத்தி வந்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது