சுமந்திரனின் தாயார் காலமானார்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் தாயார் கொழும்பு – தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் இன்று செவ்வாய் கிழமை மதியம் 1.30 மணியளவில் காலமானார்

புஷ்பராணி மதியாபரணன் (வயது – 85) முதுகுத்தண்டு சத்திர சிகிச்சையின் பின்னர் கடந்த இரண்டு வருட காலமாக சுகயீனமாக இருந்த நிலையில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.