
சுமங்கலி தீப பூஜை உற்சவம்
ஐஸ்வரியங்களை வாரி வழங்கும் மஹா லட்சுமி தெய்வத்திற்கான சுமங்கலி தீபபூஜை உற்சவம் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விஷ்ணு ஆலயங்களில் சிறப்பாக பூஜை வழிபாடுகளாடன் இடம்பெற்றது.
வசந்தமண்டபத்தில் அருள்பாலித்து வீற்றிருக்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள், சீதேவி, பூமாதேவி, மஹாலட்சுமி ஆகிய தெய்வங்களுக்கு விஷேட 108 குங்கும அர்ச்சனைகள், ஆராதனைகள் இடம்பெற்றன
இவ் கிரியைகளை ஆலயபிரதம குரு செ.ரமணீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தி வைத்தார்
இதில் பலபாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
