
சுப்பர் டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பு!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின் மாதாந்த விலை திருத்தத்தின் படி இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, லங்கா சுப்பர் டீசலின் விலை 18 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 331 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
