சுன்னாகத்தில் போதைவஸ்துகளுடன் 7 பேர் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்றும் இன்றும் சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூவர் போதை மாத்திரைகளுடனும், இருவர் ஐஸ் போதைப்பொருளுடனும், இருவர் ஹெரோயின் போதைப் பொருளாடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் 3 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் ஏற்கனவே 8 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.