சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது எப்போது?

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குக் கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சென்றிருந்தனர்.

ஒரு வார காலம் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி ஸ்டார்லைனர் விண்கலம் வெறுமையாகப் பூமிக்குத் திரும்பியது.

கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை செவ்வாய்க்கிழமை பூமிக்குத் திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷ்ய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.

நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த விண்வெளி வீரர்கள் அந்நாட்டு நேரப்படி நாளை மாலை 5.57 க்கு ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க