
சுத்தமான குடிநீர் வேண்டி மக்கள் ஆர்ப்பாட்டம்
-மூதூர் நிருபர்-
மூதூர் – சீதனவெளி கிராம மக்கள் இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு 2012 இல் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மூதூர் – சீதனவெளி கிராமத்தில் 120 குடும்பங்களை சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இப் பிரதேசத்தில் இன்னும் சுத்தமான குடிநீர் வசதி இல்லை என தெரிவித்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆர்பாட்டகாரர்கள் மூதூர் புளியடி சந்தியிலிருந்து பிரதான வீதியூடாக நடைபவணியாக மூதூர் பிரதேச சபைக்குள் நுழைந்து அங்கு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் மூதூர் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தரிடம் மகஜரும் கையளித்தனர்.
அதன் பின் மூதூர் பிரதேச சபையிலிருந்து பிரதேச செயலகம் வரை நடைபவணியாகச் சென்று மூதூர் பிரதேச செயலாளரை சந்தித்து பேசியதோடு மகஜரும் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பில் உரிய தரப்பினரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்வதாக மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் வாக்குறுதி அளித்ததையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
\


