சுதந்திர தின விழா நிகழ்வு
-அம்பாறை நிருபர்-
78 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது 78 ஆவது சுதந்திர தின தேசிய கொடியை குவாஷி நீதிமன்ற நீதிபதி அஹமட் லெப்பை ஆதம்பாவா ஏற்றி வைத்தார். இந்நாட்டின் சுபீட்சத்திற்காகவும் சமாதானத்திற்காகவும் இந்நாட்டு மக்கள் ஐக்கியப்பட்டு வாழவேண்டும் என்பதற்காகவும் தேசிய கீதம் இசைக்கப்பட்டடன்.
மேலும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்களுக்காக 2 நிமிட மெளன பிரார்த்தனையும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து மௌலவி ஏ.எம் நவாஸ் துஆ பிரார்த்தனை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் கல்முனை மேல் நீதிமன்ற தொழிநுட்பவியலாளர் எம்.எஸ்.எம் றிப்கான், ஓய்வு பெற்ற நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளரும் குவாஷி நீதிமன்ற நிர்வாகச் செயலாளருமான எஸ்.ஜமால்டீன் , ஓய்வு பெற்ற நீர்பாசன உத்தியோகத்தரும் குவாஷி நீதிமன்ற உத்தியோகத்தருமான ஏ.எம் றஸீட் , சாய்ந்தமருது பொலிஸ் உத்தியோகத்தர்கள் , மற்றும் குவாஷி நீதிமன்ற நியாயாதிக்க உத்தியோகத்தர்களான எம்.ஐ.உதுமாலெப்பை, ஏ.டபிள்யு பாத்திமா சறோபா, ஏ.எம் பாத்திமா சஸ்ரின், ஜெ.றில்சா ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
