
சுதந்திர தின நிகழ்வுகளை எளிமையான முறையில் நடத்த திட்டம்!
“தேசிய மறுமலர்ச்சிக்கு தயாராகுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் 77 வது சுதந்திர தின நிகழ்வுகள் எளிமையான முறையில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை ஆயுதத்துடன் வாகனங்கள் பேரணிக்காக இணைத்துக் கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 3 உலங்கு வானூர்திகள் மாத்திரமே சுதந்திர தின நிகழ்வுக்காக ஈடுபடுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயார் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
இந்த முறை சுதந்திர தின நிகழ்வுக்காக 1,873 இராணுவ சிப்பாய்களே ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கடந்த வருடம் இந்த செயற்பாடுகளுக்காக 3,384 சிப்பாய்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படையினரால் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் 25 துப்பாக்கி வேட்டுக்கள் சுதந்திர தினத்தன்று நண்பகல் 12 மணிக்கு தீர்க்கப்படவுள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
