
சுதந்திரதின நிகழ்வுகள் : மூடப்படவுள்ள வீதிகள் விபரம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்த கொழும்பு போக்குவரத்து பிரிவு தீர்மானித்துள்ளது.
சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
அந்த நாட்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சில வீதிகளை போக்குவரத்துக்காக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட போக்குவரத்து திட்டத்திற்கு அமைய மேற்குறிப்பிடப்பட்ட திகதிகளில் மூடப்படவுள்ள வீதிகளின் விபரம் பின்வருமாறு
கருவாத்தோட்டம் விஜேயராம மாவத்தையில் கல்லூரி மாவத்தை திசைக்கு நுழைதல்
கருவாத்தோட்டம் பெளத்தாலோக்க மாவத்தையில் இருந்து மெட்டிலன்ட் பிரதேசத்திற்கு நுழைதல்
கருவாத்தோட்டம் பெளத்தாலோக்க மாவத்தையில் இருந்து பிரேம கீர்த்தி டி அல்விஸ் மாவத்தை திசைக்கு நுழைதல்
கருவாத்தோட்டம் ஸ்டென்லி விஜயசுந்தர மாவத்தையில் இருந்து இலங்கை மன்றக்கல்லுாரி வீதி திசைக்கு நுழைதல்
கருவாத்தோட்டம் சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்க திசைக்கு நுழைதல்
இந்த வீதிகள் ஒத்திகை இடம்பெறும் காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்படவுள்ளன.
எவ்வாறாயினும் அந்த பிரதேசங்களுக்குள் இயங்கும் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
