சுண்டிக்குளத்தில் மாயமான கடற்படை சிப்பாய்கள் உயிரிழப்பு

முல்லைத்தீவு சுண்டிக்குளம் களப்பு பகுதியில் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியின் போது காணாமல் போன 5 கடற்படை சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

சுண்டிக்குளம் பகுதியில் நேற்று (30) பிற்பகல் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையின் போது 5 கடற்படை சிப்பாய்கள் காணாமல் போனதையடுத்து, அவர்களைக் கண்டுபிடிக்கக் கடற்படை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த சம்பவம் இடம்பெற்றபோது குறித்த கடற்படை சிப்பாய்கள், அப்பகுதியில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவின் ஒரு பகுதியினர் என கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.