சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்கவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கலாநிதி அனில் ஜாசிங்கவிடம் வழங்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்