சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாடு முழுவதும் புதிய ஒமிக்ரோன் தொற்று நோயாளர்கள் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் 08 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
