சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியசாலைக்கு விஜயம்

-யாழ் நிருபர்-

வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதை தொடர்ந்து  திலிப் லியனகே இன்று வியாழக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தார்.

இதனை தொடர்ந்து, யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தியினை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகத்தில் சந்திப்பில் ஈடுபட்டார்.

இவ் சந்திப்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர தேவைக்கான மருத்து உதவிகள் மற்றும் இடர்காலத்திற்கான ஒதுக்கீடுகள் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.