சுகயீனமடைந்த தாய்: குணப்படுத்த சென்ற சிறுமியின் கதி

கொக்காவெவ அலுத் திபுல் ஏரி பகுதியில் உள்ள விகாரைக்கு சுகயீனமடைந்த தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் விகாரையை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ, கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி தனது தாயுடன் பூஜை நடவடிக்கைக்காக விகாரைக்கு வந்துள்ளார். அங்கு சிறுமியின் உடலில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகக் கூறி, சிறுமிக்கு ஏற்பட்டுள்ள அமானுஷ்ய சக்திகளை அகற்ற தேவையான வேலைகளை தயார் செய்த பின்னர், தாயாரை வெளியே செல்லுமாறு கபுவா எனப்படும் விகாரையின் பாதுகாவலர் கூறியுள்ளார்.

தொடர்ந்து சிறுமியின் ஆடைகளை கழற்றுமாறு கூறியுள்ளார். அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து “கடவுள் வந்துள்ளார்” என பலமுறை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி வீட்டுக்குச் சென்று இது குறித்து தனது தாயாரிடம் கூறியதையடுத்து, தாய் நிட்டம்புவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்