சீரற்ற வானிலை -31,623 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களில் 7,944 குடும்பங்களைச் சேர்ந்த 31,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையான காலப்பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பகுதியளவில் 847 வீடுகள் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது .