
சீரற்ற வானிலை – சுமார் 366 மரணங்கள்
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையினால் கடந்த 26 முதல் இன்று திங்கட்கிழமை வரையிலான 06 நாட்களில், மொத்தம் 366 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கூற்றுப்படி, இன்று திங்கட்கிழமை மாலை 06.00 மணி நிலவரப்படி, 367 பேர் காணாமல் போயுள்ளனர்.
25 மாவட்டங்களில் 316,366 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,151,776 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 61,612 குடும்பங்களைச் சேர்ந்த 218,526 பேர் 1,564 பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளதாக கூறுகிறது.
