சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணத்தில் மேலுமொருவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-

சீரற்ற வானிலையால் சில தினங்களுக்கு முன்பு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் ஒருவர் உயிரழந்த நிலையில் யாழ். பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர் உயிரழந்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை மாலை பொன்னாலை சிறு கடலில் மீன்பிடி நடவடிக்காக சென்ற நிலையில் காணாமல்போன பொன்னாலையை சேர்ந்த  நாகன் கிருஷ்ணமூர்த்தி (வயது63) எனும் மீனவரின் சடலமே இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி, சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது