சீரற்ற வானிலையால் கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு
கொழும்பு கலட்டுவாவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படி அந்த பகுதியில் 225.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவானதுடன், லபுகம பகுதியில் 199 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவானதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, களனி, களு, ஜின் மற்றும் நில்வள கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம், ஓரளவு அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில், இன்றும், நாளையும் குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவானால், அந்த கங்கைகளில் ஓரளவு நீர் பெருக்கெடுக்கும் நிலை ஏற்படக்கூடும்.
எனவே, குறித்த கங்கைகளையும், அவற்றின் கிளை ஆறுகளையும் பயன்படுத்துபவர்கள், அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்