
சீரற்ற காலநிலை காரணமாக 5,738 குடும்பங்கள் பாதிப்பு
மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 5,738 குடும்பங்களைச் சேர்ந்த 16, 930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்திலே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, குறித்த மாகாணத்தில் 14, 806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் 1, 496 பேரும், வடமத்திய மாகாணத்தில் 356 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்