சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவை தாமதம்!
-பதுளை நிருபர்-
சீரற்ற காலநிலை காரணமாக தலவாக்கலை வட்ட கொடை சுரங்கத்துக்கு அருகாமையில் மரம் முறிந்து விழுந்ததின் காரணமாக நானுஓயாவில் இருந்து கண்டி நோக்கி செல்லும் புகையிரதம் இன்று புதன்கிழமை காலை 6:45 மணி அளவில் தடம் புரண்டுள்ளது.
இதனால் சரி செய்யும் பணிகள் இடம்பெறும் வரை மலையகத்துக்கான ரயில் சேவை தாமதம் அடைந்துள்ளதாக புகையிரத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.