சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

-நானுஓயா நிருபர்-

சீரற்ற காலநிலை காரணமாக இன்று வியாழக்கிழமை பிற்பகல் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா – உடரதல்ல பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்தன் காரணமாக உடரதல்ல மற்றும் கிளாசோ பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் சில மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நானுஓயா பொலிஸார் இணைந்து மரத்தை வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து சீரானது.

குறித்த மரம் முறிந்து விழுந்ததையடுத்து அருகில் இருந்த வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.

தொடர்ச்சியாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது இதனால் ஏராளமான இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது விழுந்து கிடப்பதன் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து பாதிப்பு