சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மக்களுக்கே அதிகளவில் பாதிப்பு!

அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

குருணாகல் ஹெட்டிபொல பகுதியில், அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாகத் தொடர்ந்தும் 81 நலன்புரி நிலையங்களில் 8,377 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக 470,094 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

இதன்படி, அந்த மாவட்டத்தில் மாத்திரம் 162,092 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.