![](https://minnal24.com/wp-content/uploads/2025/01/retgy.png)
சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து
-மூதூர் நிருபர்-
திருகோணமலை – அக்போபுர பொலிஸ் பிரிவிலுள்ள 85 ஆம் கட்டைப்பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சீமெந்து கலவையை ஏற்றிக் கொண்டு பயணித்த இவ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த சாரதியும், உதவியாளரும் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்