சீன வெடியைக் கடித்துப் பார்த்த பல் வைத்தியர் ஆபத்தான நிலையில்

பாணந்துறையில் உள்ள அரச மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் பல் மருத்துவர் , புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தனது மகன் வாங்கிய சீனப் பட்டாசைக் கடித்ததில், அது வெடித்து பலத்த காயமடைந்ததால், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவரின் மகன், அருகிலுள்ள ஒரு கடையில் இருந்து ஐந்து சீன வெடிகளை வாங்கி, தனது வீட்டின் அறையில் உள்ள மேசையில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

அவை தொடர்பில் சரியான அறிவு இல்லாத மருத்துவர் அவற்றை அடையாளம் காண தனது பற்களால் அவற்றில் ஒன்றைக் கடித்துள்ளார்.

அந்த நேரத்தில், குறித்த பட்டாசு அவரது வாயில் வெடித்து, அவரது முகம் மற்றும் வாயில் பலத்த காயங்கள் ஏற்பட்டன, மேலும் பல பற்களும் சேதமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஆபத்தான நிலையில் உள்ள மருத்துவர், கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க